தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
7 ஐஐடிகள், 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மோடி அரசின் திட்டங்கள் அனைவருக்கும் அதிகாரம் அளிக்கிறது.
திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 1.40 கோடி இந்தியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தேசியக் கல்விக்கொள்கை மிகப்பெரும் மாற்றத்தை உறுதி செய்கிறது.
சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
அரசின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான சமூக நீதியின் அடையாளம்.
பயன்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்றடைவதில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது.
அரசின் அனைத்து வளங்களும் சமமாக அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
தங்கள் அரசு பொறுத்தவரை சமூக நீதி என்பது சிறப்பான அரசு நிர்வாக மாடலாக திகழ்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிக்காக அரசு பணியாற்றி வருகிறது. அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது
இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.