இந்தியா
LIVE

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-02-01 09:49 IST   |   Update On 2024-02-01 12:28:00 IST
2024-02-01 06:22 GMT

உள்கட்டமைப்புக்கான நிதி ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

2024-02-01 06:21 GMT

மக்கள்தொகை பெருக்கத்தின் சவால்களை எதிர்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

2024-02-01 06:20 GMT

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட உள்ளது.

2024-02-01 06:19 GMT

ஆன்மிக சுற்றுலா போன்றவை உள்ளூர் மக்களுக்கு சுயதொழில் முனைவுக்கு ஊக்கம் அளிக்கிறது.

2024-02-01 06:18 GMT

இளைஞர்களுக்கு கடனுதவி வழங்க ரூ.1 லட்சம்கோடி நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

2024-02-01 06:17 GMT

லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2024-02-01 06:17 GMT

புதிய விமான நிலையங்கள், விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

2024-02-01 06:16 GMT

3 பிரதான ரெயில்வே வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும்.

விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக இரட்டிப்பு.

2024-02-01 06:15 GMT

அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2024-02-01 06:15 GMT

பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News