தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
நாட்டிலுள்ள சுமார் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆக்கப்பட உள்ளனர்.
நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர்.
ஐந்து ஒருங்கிணைந்த அக்வா பார்க் அமைக்கப்பட உள்ளது.
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 2024ம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
சிறு கடன் உதவி மூலம் பயன்பெற்ற சாலையோர வியாபாரிகள் 2.3 லட்சம் பேர்.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.
அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் பொது, தனியார் துறை பங்களிப்பை அரசு அதிகரிக்க உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட கடன் 22.5 லட்சம் கோடி.
அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வீடுகளில் சூரிய மின் தகடுகள் பதிக்கும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.