இந்தியா

ரூ.2,000 கோடி மதிப்பில் ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2025-06-25 03:45 IST   |   Update On 2025-06-25 03:45:00 IST
  • அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
  • , கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.1,981.90 கோடிக்கு இந்த ஆயுதங்கள் வாங்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13 ஒப்பந்தங்கள் மூலம் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், குறைந்த எடை கொண்ட ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.

ஏவுகணைகள், ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள், சிறிய ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆயுதக் கிடங்கு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் அவற்றை அழித்தாலும் இவ்வகை தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News