இந்தியா

ரெயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: விபத்துகளை தவிர்க்க புது வழிமுறைகளை வெளியிட்ட ரெயில்வே

Published On 2025-07-10 01:04 IST   |   Update On 2025-07-10 01:04:00 IST
  • அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
  • 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும்.

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 10) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ரயில்வே லெவல் கிராசிங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரெயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து ரெயில் கேட்டுகளையும் ஆய்வு செய்ய ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News