இந்தியா

மெகுல் சோக்சி

மெகுல் சோக்சிக்கு எதிராக மேலும் 3 வழக்குகளை பதிவு செய்தது சி.பி.ஐ

Published On 2022-12-16 19:29 GMT   |   Update On 2022-12-16 19:29 GMT
  • மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
  • மெகுல் சோக்சி, அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆனது

புதுடெல்லி:

இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை கடனாக பெற்றார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போதே மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிகாவின் ஆன்டிகுவா தீவில் குடியுரிமை பெற்று தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News