இந்தியா

பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட்: கூட்டத்தொடருக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டதாக தகவல்

Published On 2026-01-09 16:21 IST   |   Update On 2026-01-09 16:21:00 IST
  • மத்திய பட்ஜெட் கடந்த 2017-ல் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
  • வருகிற பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிறு என்பதால், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

பாராளுமன்றத்தில் கடந்த 2017-ல் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அட்டவணையை பாாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டம் வருகிற 28-ந்தேி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரண்டு அவை உறுப்பினர்களில் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார். ஜனவரி 29-ந்தேதி அவைகள் நடைபெறாது.

ஜனவரி 30-ந்தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 31-ந்தேதி இரண்டு அவைகளும் நடைபெறாது.

பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

அதன்பின் ஒரு மாதகால இடைவெளிக்குப்பின் மார்ச் 9-ந்தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும். வழக்கமாக வெள்ளிக்கிழமைக்கு பிறகு பாராளுமன்றம் காலைவரையின்றி ஒத்திவைக்கப்படும். ஏப்ரல் 3-ந்தேதி புனித வெள்ளி என்பதால் விடுமுறையாகும். இதனால் வியாழக்கழமையே அவைகள் ஒத்திவைக்கப்படும்.

Tags:    

Similar News