இந்தியா

பட்ஜெட் 2024: பெண்கள் உயர்கல்வி பயில்வது 28 சதவீதம் அதிகரித்துள்ளது

Published On 2024-02-01 07:29 GMT   |   Update On 2024-02-01 07:43 GMT
  • விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.
  • 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்களால் நேரடியாக பலன் அடைந்துள்ளனர். ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருதி செயல்படுகிறோம்.

சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News