இந்தியா

பாலைவன மண்ணில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ

Published On 2024-05-22 12:34 GMT   |   Update On 2024-05-22 12:34 GMT
  • இந்தியாவின் பல நகரங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
  • இந்த வருடம் 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் வெப்பம் குறையாத நிலையில், ஒன்றிரண்டு மாநிலங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 46 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெயில் பதிவாகியுள்ளது.

அப்படியென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் வெயில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இந்த வெயிலிலும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானெர் வெயில் மிகவும் அதிகமாக வாட்டி வதைக்கும் நகராக பார்க்கப்படுகிறது.

அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் மண்ணில் சிறிது நேரம் புதைத்து வைக்கப்பட்ட அப்பளம் எப்படி முறுமுறுவென நொறுங்கிறது என்பதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா ராஜஸ்தானின் பாலைவனம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News