இந்தியா

இன்னும் 2 மணி நேரத்தில் வெடிக்கும்.. ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம், விமான நிலையத்துக்கு மிரட்டல்

Published On 2025-07-26 18:21 IST   |   Update On 2025-07-26 18:21:00 IST
  • மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் பீதியில் ஆழ்ந்தது.

முதல்வர் அலுவலகத்துடன் சேர்த்து ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மின்னஞ்சல்களில், முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு தடுப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

இருப்பினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இரு இடங்களிலும் கிடைக்காததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.  

Tags:    

Similar News