இந்தியா
பஞ்சாபில் குண்டுவெடிப்பு.. காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு..
- பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
- வெடிப்பு நிகழ்ந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் காலிஸ்தான் பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நவ்ஷேரா கிராமத்திற்கு அருகில் நடந்தது.
குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
வெடிபொருட்களைக் கையாளும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கவனக்குறைவாகக் கையாளப்பட்டதால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆரம்ப முடிவு. இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விசாரணையில் கொல்லப்பட்ட நபர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வெடிப்பு நிகழ்ந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.