இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தலில் தாமரை மலரும்- உ.பி. துணை முதல்வர் சொல்கிறார்

Published On 2024-12-02 12:09 IST   |   Update On 2024-12-02 12:09:00 IST
  • மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராவதை நிறுத்தும் வகையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்.
  • அரியானாவில் இந்தியா கூட்டணி அடித்து நொறுக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் படுதோல்வியடைந்தது.

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாவது:-

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடி பிரதமராவதை நிறுத்தும் வகையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் போட்டது. ஆனால், மோடி 3-வது முறையாக பிரதமரானார். அரியானாவில் இந்தியா கூட்டணி அடித்து நொறுக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் படுதோல்வியடைந்தது.

பா.ஜ.க.வின் தாமரை டெல்லி சட்டமன்ற தேர்தலில் மலரும். பா.ஜ.க. ஆட்சி அமக்கும். இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை.

இவ்வாறு கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பிடித்திருந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News