இந்தியா

எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது சிறையில் அடைக்க பாஜக முயற்சிக்கிறது: மம்தா குற்றச்சாட்டு

Published On 2024-04-23 14:07 GMT   |   Update On 2024-04-23 14:07 GMT
  • மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள்.
  • நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்.

மும்பை தாக்குதல் (26/11) சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சந்தித்ததாக கூறப்படும் மும்பை சேர்ந்த ஒருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்ட நிலையில் கைது செய்துள்ளது.

இந்த நிலையில்தான் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது ஜெயிலில் அடைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா தலைவர் ஒருவர் வெடிகுண்டு வெடிப்பேன் எனச் சொல்கிறார். மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள். நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள், அவர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பே நாங்கள் அந்த நபரைப் பிடித்தோம்.

கைது செய்யப்பட்ட நபர் அபிஷேக்கின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். பேஸ்டைம் (Facetime App) மூலமாக அபிஷேக்கை அழைத்து சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் குற்றவாளிக்கு சந்திக்க நேரம் வழங்கியிருந்தால், அபிஷேக்கை அந்த குற்றவாளி கொலை செய்திருக்க முடியும்.

பா.ஜனதா அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது சிறையில் அடைக்க விரும்புகிறது. அவர்கள் சிலரை உலகில் இருந்து அனுப்ப விரும்புகிறது. நீங்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றால், மக்களை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News