இந்தியா

பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

Published On 2026-01-09 00:11 IST   |   Update On 2026-01-09 00:11:00 IST
  • மேற்கு வங்கத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு பணிகள் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எஸ்.ஐ.ஆர். பணிகள் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பல பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு கூட அவர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பெண் வாக்காளர்களின் பெயர்கள் ஏன் அதிக அளவில் நீக்கப்பட்டன? ஏன் இளைஞர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? அவர்கள் வாக்களிக்க அனுமதி இல்லை.

வாக்காளர் பட்டியலில் இருந்து 54 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளனர்.

எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி என தெரிவித்தார்.

Tags:    

Similar News