இந்தியா

கடைசி நேரத்தில் ஓடோடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பா.ஜனதா வேட்பாளர்- வீடியோ

Published On 2024-05-09 16:03 GMT   |   Update On 2024-05-09 16:03 GMT
  • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
  • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News