இந்தியா

முதல் மந்திரி நிதிஷ்குமார்

பீகாரில் விஷ சாராய பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

Published On 2022-12-15 21:04 GMT   |   Update On 2022-12-15 21:04 GMT
  • பீகாரில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
  • எதிர்க்கட்சிகள் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

விஷ சாராய உயிரிழப்பு குறித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், மதுவிலக்கு இல்லாத போதும் கள்ளச்சாராயத்தால் மரணம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பீகாரில் முழுமையாக மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் சர்தார் வல்லபாய் படேல் நினைவுதின விழாவில் அவர் பேசுகையில், நடைமுறையில் உள்ள மதுவிலக்கு சமூகத்தில் நல்ல பலனை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டார்.

பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News