இந்தியா

தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கிய சக ஆசிரியைகள்.. மாணவர்கள் கண்முன் நடந்த மோதல்

Published On 2023-05-25 20:57 IST   |   Update On 2023-05-25 20:57:00 IST
  • தலைமை ஆசிரியையை சக ஆசிரியைகள் அங்குள்ள வயல்வெளியில் தள்ளி கடுமையாக தாக்கினர்.
  • வகுப்பறை ஜன்னல்களை மூடுவது தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல்

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆசிரியைகளில் ஒரு தரப்பினர் வகுப்பறையின் ஜன்னல்களை மூடுமாறு கூறி உள்ளனர். மற்றொரு தரப்பினர் அதற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைமை ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியேறினார். ஆனால் அவரை துரத்தி வந்த இரண்டு ஆசிரியைகள், தலைமை ஆசிரியையை அங்குள்ள வயல்வெளியில் தள்ளி சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் தாக்கினர். அதன்பின்னர் அந்த வழியாக சென்ற சிலர் சண்டையை விலக்கிவிட்டுள்ளனர். சக மாணவர்கள் வேடிக்கை பார்க்க ஆசிரியைகள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு ஆசிரியைகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட தகராறு காரணமாக, பள்ளியில் மோதிக்கொண்டதாக கல்வி அதிகாரி நரேஷ் கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் நரேஷ் கூறினார்.

Tags:    

Similar News