இந்தியா

வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும் -பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2025-11-11 07:23 IST   |   Update On 2025-11-11 07:23:00 IST
  • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
  • தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் 136 பெண்கள் உட்பட 1,302 போட்டியிட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News