இந்தியா
பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ்: ரெயிலில் பெண்களை ரகசியமாக படம்பிடித்து பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கம்
- இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல்.
- பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் நம்ம மெட்டோ ரெயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுவதாக பாஜக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பெங்களூரு எம்.பி. மோகன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,திவில், " இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல். இவை கடுமையான குற்றம். பெங்களூரு நகர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் பகிர்ந்தார். பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர். சம்மந்தபட்டவர்கள் மீது கால்வளத்துறை வழகுபதவு செய்து விசாரித்து வருகிறது.