இந்தியா

பெங்களூரு: பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் - பரபரப்பு சம்பவம்

Published On 2025-07-24 01:15 IST   |   Update On 2025-07-24 01:16:00 IST
  • கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்தனர்.
  • கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான கலசிபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், அங்கு வைக்கப்பட்டிருந்த பைகளில், ஆறு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டிட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான பை குறித்து தகவல் கிடைத்ததும், பெங்களூரு போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிபொருட்களை மீட்டனர். அவை தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு இருந்ததாக மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ். கிரிஷ் உறுதிப்படுத்தினார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 1:15 மணியளவில் கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக FIR கூறுகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் சாதாரணமாக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால், இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News