இந்தியா

ஜனாதிபதியை சந்தித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

Published On 2022-09-06 16:37 GMT   |   Update On 2022-09-06 16:37 GMT
  • நேற்று இந்தியா வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளியுறவு மந்திரியை சந்தித்தார்.
  • டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்தார்.

புதுடெல்லி:

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய- வங்கதேசம் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளை இணைக்கும் வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரையும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்தார்.

Tags:    

Similar News