இந்தியா

பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட டெல்லி அரசு தடை

Published On 2025-06-06 20:46 IST   |   Update On 2025-06-06 20:48:00 IST
  • இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உத்தரப்பிரதேசமும் பக்ரீத்தில் விலங்குகளை வெட்டுவதை கட்டுப்படுத்தும் உத்தரவை பிறப்பித்திருந்தது.

பக்ரீத் கொண்டாட்டங்களின் பின்னணியில், டெல்லி பொது இடங்களில் விலங்குகளை கொல்வதையும், அவற்றின் படங்களை பரப்புவதையும் தடை செய்துள்ளது.

பொது தூய்மையைப் பேணுவதற்கும், கொண்டாட்டங்களின் போது வகுப்புவாத மோதல்களைத் தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள், பிற விலங்குகள் அல்லது பாதுகாக்கப்பட்ட வகையைச் சேர்ந்த விலங்குகளை யாரும் சட்டவிரோதமாக வெட்டக்கூடாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பு, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960, வாகனங்களில் விலங்குகளை கொண்டு செல்லும் சட்டம், 1978, இறைச்சி கூடங்கள் சட்டம், 2001, விவசாய கால்நடை பாதுகாப்புச் சட்டம், 1991 மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2006 ஆகியவற்றின் பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லிக்கு முன், உத்தரப்பிரதேசமும் பக்ரீத்தில் விலங்குகளை வெட்டுவதை கட்டுப்படுத்தும் உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News