இந்தியா

மோசமான சாலைகளே விபத்துகளைக் குறைக்கும்..!- பா.ஜ.க. எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி

Published On 2025-11-06 11:30 IST   |   Update On 2025-11-06 11:30:00 IST
  • நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
  • தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.

நல்ல சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் என்று தெலுங்கானா பாஜக எம்பி விஸ்வேஷ்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும். நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.

முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததற்கு நல்ல சாலை கட்டமைப்பும் ஒரு காரணம்.

மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News