இந்தியா

VIDEO : பசுவின் மடியில் இருந்து நேரடியாக பால் குடிக்கும் குழந்தை

Published On 2025-07-25 13:32 IST   |   Update On 2025-07-25 13:32:00 IST
  • பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
  • எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது.

இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், குழந்தை ஒன்றை நேரடியாக பசுவின் மடியில் இருந்து ஒருவர் பால் குடிக்க வைக்கும் காட்சிகள் உள்ளது.

பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகுதான் இணை உணவுகள் சேர்த்து வழங்கப்படும். ஆனால் வீடியோவில் ஒருவர் நேரடியாக பசுவின் மடியில் இருந்து குழந்தைக்கு பச்சை பால் ஊட்டுவது போல் உள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. பயனர்கள் பலரும் இது குழந்தைக்கு நல்லதல்ல. அந்த குழந்தை நோய் கிருமிகளுக்கு ஆளாகக்கூடும் என கருத்துக்களை பதிவிட்டனர்.




Tags:    

Similar News