இந்தியா

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா - கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

Published On 2024-01-20 12:46 GMT   |   Update On 2024-01-20 12:46 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • விழாவில் பங்கேற்க முக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான சச்சின் டெண்டூல்கருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனைதொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தோனியையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் தோனி இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட் வீரர் விராட் கோலி-க்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோலி கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News