இந்தியா

எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கை உறுதி: மக்களவையில் மந்திரி பதில்

Published On 2025-12-09 15:05 IST   |   Update On 2025-12-09 15:05:00 IST
  • கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
  • பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று இண்டிகோ விமான நிறுவன பிரச்சனை எழுப்பப்பட்டது.

புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடி சிக்கித் தவிக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்றன் மக்களவையில் இன்று இண்டிகோ பிரச்சனை எழுப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு பதிலளித்துப் பேசியதாவது:

எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது.

கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

இதுவரை ரூ.750 கோடி பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.

பெங்களூருவில் 121, ஐதராபாத்தில் 58, சென்னை 41, கேரளா 4 என இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்தாகின. தொடர்ந்து ரத்து அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருவதால் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளை குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Tags:    

Similar News