இந்தியா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த உதவி ஆணையர் கைது- ரூ.3.5 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

Published On 2024-05-22 09:48 GMT   |   Update On 2024-05-22 09:48 GMT
  • 1100 கோடி மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் விசாரித்து வந்தார்.
  • அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவை தெலுங்கானாவின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

உமா மகேஸ்வர ராவின் வீடு மற்றும் தெலுங்கானா, விசாகப்பட்டினத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில், சுமார் 3.5 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களும், ரொக்கப்பணமும், தங்கம், வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

தனது பதவியை பய்னபடுத்தி முறைகேடான வழிகளில் இவர் சொத்து சேர்த்துள்ளார் என்ற இவர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

1100 கோடி அளவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் சாஹிதி இன்ப்ரா மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தின் மத்திய குற்றப்பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையராக உமா மகேஸ்வர ராவ் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News