இந்தியா

அசாம் மழை

அசாம் கனமழை - வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 118 ஆக உயர்வு

Update: 2022-06-25 04:20 GMT
  • அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 30க்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காட்டு விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.

கவுகாத்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது என மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்துச் செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

மேலும், மாநிலம் முழுவதும் 20 பாலங்கள், 173 சாலைகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News