இந்தியா

நடுவானில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம்

Published On 2023-07-04 13:44 IST   |   Update On 2023-07-04 13:44:00 IST
  • டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் கடந்த 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணி ஒருவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் எனது மகளை மிரட்டுவாய் என ஆவேசமாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

2 பயணிகளையும் விமான பணி பெண்கள் சமாதானப்படுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. 27 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனமான விஸ்தாராவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் இருந்து டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். எஞ்சிய பயணம் அவர்களுக்கு சுமூகமாக அமைந்தது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News