இந்தியா

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை.. பாரா கிரிக்கெட்டில் கலக்கி வரும் அமீர் ஹூசைன்

Published On 2024-01-12 14:48 IST   |   Update On 2024-01-12 15:10:00 IST
  • சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார்.
  • பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன், பிறப்பால் எல்லோர் போலவும் சாதாரணமாக பிறந்தவர். ஆனால் ஒரு விபத்து அவரை ஊனம் ஆக்கியது. அந்த விபத்தில் தனது இரு கைகளையும் இழந்த பின்னரும் ஊக்கத்துடன் கிரிக்கெட் விளையாடி, பாரா கிரிக்கெட் வீரர் கேப்டனாக திகழ்கிறார். அவரது வாழ்க்கை கதையை பார்க்கலாம்.

அமீர் 8 வயதாக இருந்தபோது அவரது குடும்பத்திற்கு சொந்தமான மரத்தூள் ஆலையில் தனது தந்தைக்கு மதிய உணவு கொடுக்க சென்றுள்ளார். அவரது தந்தையும், சகோதரரும் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத நேரத்தில் இயந்திரத்திற்குள் அவரது இரண்டு கைகளும் சிக்கி கொண்டன. அவரை இந்திய ராணுவ பிரிவு வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது. 

அந்த விபத்திலிருந்து குணமடைய அவருக்கு 3 வருடம் ஆகியது. இரண்டு கைகளும் இழந்த பின்னர் பல தடைகளை தாண்டி தனது பாட்டியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துள்ளார். சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார். அவரது ஆர்வத்தை கண்டு அவரது கல்லூரி ஆசிரியர் அவருக்கு பாரா கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதை கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வைத்து பேட்டிங் செய்து வருகிறார். தனது கால்களை பயன்படுத்தி தன்னால் முடிந்த வரை பந்தை அதிக தூரம் வீசிகிறார்.

தனது மன உறுதி மற்றும் பயற்சியின் காரணமாக 2013ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

அமீர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 100 பேருக்கு தன்னை போல இருக்கும் மாற்றுதிறனாளிக்கு விளையாட்டு பயற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட வேண்டும் என்று அமீர் விரும்புகிறார். அண்மையில் துபாய் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Tags:    

Similar News