இந்தியா

கம்பெனிக்கு கட்டுபடி ஆகல.. பெங்களூரு தலைமையகத்தை மாற்றும் அமேசான் - எங்கு தெரியுமா?

Published On 2024-11-18 14:29 IST   |   Update On 2024-11-18 14:30:00 IST
  • பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) அமேசான் இந்தியா தலைமையகம் உள்ளது.
  • சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவின் சிலிகான் VALLEY என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமானம் நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இதன்மூலம் வாடகை செலவை வெகுவாக குறைக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

 

தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

இந்த டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதமான ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும். இந்த இடமாற்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News