இந்தியா

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: நவம்பர் 2 வரை ஏர் இந்தியா சேவை ரத்து

Published On 2023-10-26 06:28 GMT   |   Update On 2023-10-26 06:28 GMT
  • இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.
  • ஏர் இந்தியா விமானம் தனது சேவையை நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது

புதுடெல்லி:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 19-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Tags:    

Similar News