இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அகமதாபாத்- காட்விக் விமான சேவை நிறுத்தம்- ஏர் இந்தியா
- காட்விக்கிற்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் போயிங் விமானம் அகமதாபாத்தில் இருந்து காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில், மேலே உயர்ந்து பறக்க முடியாமல் அரசு மருத்துவமனை கல்லூரி வளாக விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரேயொருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்கள் 19 பேரும் உயிரிழந்தனர்.