null
சலுகை விலையில் விமான டிக்கெட்... 'ஃப்ரீடம் சேல்' விற்பனையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'ஃப்ரீடம் சேல்' டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது.
- ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 'ஃப்ரீடம் சேல்' டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க்கில் ரூ.1,279 முதல் சுமார் 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகையில் வழங்குகிறது.
ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்கு ஆகஸ்ட் 15 வரை முன்பதிவுகள் திறந்திருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் ரூ.1,279 முதல் தொடங்கி சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் ரூ.4,279 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விற்பனை ஆகஸ்ட் 10 முதல் www.airindiaexpress.com மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் செயலியில் தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை மற்ற அனைத்து முக்கிய முன்பதிவு ஆப்களில் டிக்கெட் கிடைக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைக்கும் 500க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.