இந்தியா

ஜம்முவில் தரையிறங்காமல் மீண்டும் டெல்லி திரும்பிய விமானம் - ஏர் இந்தியா விளக்கம்

Published On 2025-06-23 22:20 IST   |   Update On 2025-06-23 22:20:00 IST
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-2564 இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டது.
  • இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்காமல் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-2564 இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. அட்டவணையின்படி, விமானம் ஸ்ரீநகருக்குச் செல்வதற்கு முன்பு ஜம்முவில் நிறுத்தப்பட இருந்தது.

இருப்பினும், ஜம்மு விமான நிலையத்திற்கு மேல் வந்த பின், விமானி சிறிது நேரம் தரையிறங்காமல் வானிலேயே சுற்றிய விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜிபிஎஸ் சிக்னல் பிரச்சினை காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக டெல்லியை அடைந்துவிட்டதாகவும், அவர்களுக்கான கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News