இந்தியா
பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி முக்கிய ஆலோசனை..
- மத்திய அரசு முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது.
- எல்லைகளில் பதட்டங்கள் நிலவும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22-ந் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்குபதிலடி கொடுக்க மத்திய அரசு முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது.
இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டைத் தாக்கக்கூடும் என்று பாகிஸ்தானில் அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில் இன்று மதியம் டெல்லியில் விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, விமானப்படை தலைமை தளபதி உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
எல்லைகளில் பதட்டங்கள் நிலவும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.