இந்தியா

ஊழியர்கள், அதிகாரிகள் விடுமுறைகள் ரத்து - புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு

Published On 2025-05-10 08:52 IST   |   Update On 2025-05-10 08:52:00 IST
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால் ரத்து செய்யப்படுகிறது.
  • விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து விதமான விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ காரணங்களுக்காக மறு உத்தரவு வரும் வரை எந்த அதிகாரிக்கும் விடுமுறை மற்றும் விடுப்பு வழங்கப்படக்கூடாது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால் ரத்து செய்யப்படுகிறது மற்றும் விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று வரை விடுப்பில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News