இந்தியா
null

அகமதாபாத் விமான விபத்து - சகோதரர் உடலுக்கு விஸ்வாஸ் குமார் கண்ணீர் மல்க அஞ்சலி

Published On 2025-06-18 14:25 IST   |   Update On 2025-06-18 14:36:00 IST
  • 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியான லண்டன் குடிமகன் விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.
  • விஸ்வாஷ் குமாரின் சகோதரர் அஜய் குமார் ரமேஷின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் டையூவில் நடைபெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில், அந்த விமானத்தில் இருந்த அனைவரும் பலியான நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியான லண்டன் குடிமகன் விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.

பலத்த காயமடைந்த அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் விஸ்வாஷ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

லண்டனில் 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ், விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்து விட்டு சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் லண்டன் சென்றபோது விபத்தில் சிக்கினார். விமானத்தில் 11ஏ இருக்கையில் இருந்த ரமேஷ் விஸ்வாஸ் குமார் உயிர் தப்பிய நிலையில் 19ஏ இருக்கையில் இருந்த அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஸ்வாஷ் குமாரின் சகோதரர் அஜய் குமார் ரமேஷின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் டையூவில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் கண்ணீர் மல்க கதறி அழுத விஸ்வாஷ் குமாருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

Tags:    

Similar News