இந்தியா

அகமதாபாத் விமான விபத்து - 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2025-06-19 10:04 IST   |   Update On 2025-06-19 10:04:00 IST
  • விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.
  • உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்பத்தினரின் டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது.

கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.

அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில்,

இன்று காலை வரை, 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள உடல்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News