இந்தியா

விஸ்தாரா விமானத்தின் கடைசி பயணம்: பிரியாவிடை கொடுத்த விமான நிலைய ஸ்டாஃப்கள்

Published On 2024-11-12 06:41 IST   |   Update On 2024-11-12 06:41:00 IST
  • விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
  • நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.

நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.

விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News