இந்தியா

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2025-07-13 17:41 IST   |   Update On 2025-07-13 17:41:00 IST
  • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.
  • பிரதமர் மோடி தெலுங்கு மொழியில் இரங்கல் செய்தியை பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.

இவரது திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெலுங்கு மொழியில் இரங்கல் செய்தியை பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், " ஸ்ரீ கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது சினிமா திறமை மற்றும் பல்துறைத்திறனுக்காக அவர் நினைவுகூரப்படுவார்.

தனது அற்புதமான நடிப்பால் பல தலைமுறைகளாக பார்வையாளர்களை கவர்ந்தவர். சமூக சேவையிலும் முன்னணியில் இருந்த அவர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News