இந்தியா

மனைவிகளை ஏமாற்றி 4 திருமணம் செய்தவர் அரசை விமர்சிப்பதா? பவன் கல்யாண் மீது ஜெகன்மோகன் ரெட்டி தாக்கு

Published On 2023-07-22 11:12 IST   |   Update On 2023-07-22 11:12:00 IST
  • கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.
  • நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

திருப்பதி:

ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி அடுத்த வெங்கடகிரியில் ஒய்.எஸ்.ஆர். நேதன்னா நேஸ்தம் திட்ட 5-வது தவணை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வரவும், அவர்களுக்கு உதவவும் ஒய்.எஸ்.ஆர்.நேதன்னா என்ற திட்டத்தில் மூலம் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 80 ஆயிரத்து 686 கைத்தறி நெசவாளர்களுக்கு கணக்கில் நேரடியாக ரூ.193.64 கோடி டெபாசிட் செய்யப்படும்.

ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 4 திருமணங்கள் செய்து கொண்டவர். அவர்அரசை விமர்சிக்க தகுதியற்றவர். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார்.

கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.

சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகன்தான் பவன் கல்யாண். பாலகிருஷ்ணாவின் மருமகனும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

அவர்கள் அரசைபற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News