Video : ராஜஸ்தான் அரச குடும்ப வாரிசுகளிடையே வெடித்த சண்டை... போர்க்களமான உதய்பூர் அரண்மனை- போலீஸ் குவிப்பு
- 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏ விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார்.
- குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது.
ராஜஸ்தான் மேவார் அரசு குடும்பத்தைச் சேர்த்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை உதய்பூர் அரண்மனையில் மோதலாக வெடித்துள்ளது. மேவார் அரச குடும்பத்தின் 77-வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏவும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார். மன்னர் குடும்பத்தைச் சேர்த்த விஸ்வராஜ் சிங்கின் தந்தை மகேந்திர சிங் மேவார் கடந்த 10 ஆம் தேதி காலமானதை அடுத்து யார் முடிசூட்டுவது என்று உறவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் விஷ்வராஜ் முடிசூட்டிக்கொண்டது அரண்மனை அறக்கட்டளையை நிர்வகித்து வரும் விஷ்வராஜ் சிங்கின் சித்பவாவுக்கும், ஒன்றுவிட்ட சகோதரர் லக்ஷ்ய ராஜ்ஜுக்கும் பிடிக்கவில்லை. ஏற்கவனே இவர்களுக்குள் பகை இருந்த நிலையில் நேற்று முடிசூட்டிக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு சடங்கு சம்பிரதாயப்படி , விஸ்வராஜ் சிங் உதய்பூர் அரண்மனைக்கு வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குல தெய்வ கோவிலான ஏக்லிங்நாத் கோவிலுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விஷ்வராஜ் சிங், பாஜக எம்எல்ஏ 3என்ற தனது செல்வாக்கை பய்னபடுத்தி தனது ஆதரவாளர்களுடன் அரண்மை வசாலில் நின்றபடி உள்ளே கற்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளார்.
பதிலுக்கு அரண்மனை உள்ளே இருந்தவர்களும் கற்களை வீசியதால் மோதல் பெரிதாகி அரண்மனை பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. பதற்றம் அதிகரித்தால் அரண்மனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் விஷ்வராஜ் தரப்பில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். விஸ்வராக் ஆதரவாளர்களான பாஜக தொண்டர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது.
இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அரண்மனை கதவு முன்பாக விஷ்வராஜ் சிங் தனது ஆதரவாளர்களுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தால் உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் தலையிட்டுள்ளார். இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்க்க உள்ளதாக விஸ்வராஜ் சிங் தெரிவித்துள்ளார்.