இந்தியா
கொரோனா வைரஸ்
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா - ஒரே நாளில் 926 பேருக்கு பாதிப்பு
- இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
- மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 926 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 926 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 4487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.