இந்தியா

மகாராஷ்டிராவில் முதல் 2 மணி நேரத்தில் மந்தமான வாக்குப்பதிவு

Published On 2024-11-20 11:01 IST   |   Update On 2024-11-20 11:01:00 IST
  • மும்பை நகர்ப்பகுதிகளில் 6.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சச்சின் தெண்டுல்கர் போன்றோர் காலையிலேயே வாக்கு மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார். மக்கள் அதிக அளவில் திரண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

என்றபோதிலும் காலை 9 மணி வரை அதாவது 2 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் தோராயமான 6.61 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அர்மோரி தொகுதியில் 13.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மும்பை புறநகர்ப் பகுதிகளில் 7.88 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பந்துப் மற்றும் முலுந்த் புறநகர்ப் பகுதிகளில் 10.59 சதவீதம் மற்றும் 10.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மும்பை நகர்ப்பகுதியில் 6.25 சதவீதம் வாக்குள் பதிவாகியுள்ளது. கொலபாவில் 5.35 சதவீதம் வாக்குள், வொர்லியில் 3.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

Similar News