இந்தியா

டெல்லியில் ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 6 பேர் உயிரிழப்பு

Published On 2023-04-22 19:26 GMT   |   Update On 2023-04-22 19:26 GMT
  • டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,595 ஆக உயர்ந்துள்ளது.
  • ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று (கடந்த 24 மணி) நேரத்தில் 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், புதிய இறப்பு எண்ணிக்கையுடன், டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,595 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவை சமாளிப்பதற்கான தயார் நிலையைக் கண்டறிய கடந்த 11ம் தேதி அன்று டெல்லி மருத்துவமனைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒமைக்ரானின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை தொற்றும் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News