இந்தியா
சிக்கிமில் இடைவிடாத கனமழை: 500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு- மாயமான 8 பேரை தேடும் பணி நிறுத்தம்
- சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு.
- முக்கிய சாலை தடைபட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில பெய்யும் இடைவிடாத மழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலை தடைப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் மங்கன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் டீஸ்ட்லா ஆற்றில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயம் அடைந்தனர். 8 சுற்றுலாப் பயணிகள் மாயமானார்கள். கனமழையால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வடக்கு சிக்கிம் பகுதிகளுக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.