இந்தியா

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி - 17 பேர் படுகாயம்

Published On 2025-07-15 22:22 IST   |   Update On 2025-07-15 22:22:00 IST
  • டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
  • ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததார்.

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில்  பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, டோடா நகரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள போண்டா அருகே டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

சுமார் காலை 9 மணியளவில்,  25 பேருடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், முகமது அஷ்ரப் (35), மங்க்தா வாணி (51), அட்டா முகமது (33), தாலிப் ஹுசைன் (35), மற்றும் ரஃபீகா பேகம் (60) ஆகியோர் உய்ரில்நந்தனர்.

மேலும், காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐந்து வயது குழந்தை ஒன்று சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News