இந்தியா

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் 5 அடி குழி தோண்டி புதைத்த மனைவி..!

Published On 2025-07-14 20:13 IST   |   Update On 2025-07-14 20:13:00 IST
  • அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைப்பு.
  • அக்கம்பக்கத்தினர் கணவரை எங்கே? என கேள்வி எழுப்பியதால் வீட்டில் இருந்து ஓட்டம்.

கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து தெரியாது போன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமான கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கணவன், மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி கணவன், மனைவி இடையே கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது கணவன் குடிபோதையில் இருந்துள்ளார்.

சண்டை அதிகரிக்க நிதானத்தை இழந்த மனைவி, கணவனை அடித்து கொலை செய்துள்ளார். கணவரை கொலை செய்த பின், மனைவிக்கு பயணம் தொற்றிக் கொண்டது.

வீட்டிற்குள்ளேயே 5 அடி பள்ளம் தோண்டி, உடலை புதைத்துள்ளார். பின்னர் ஏதும் தெரியாது போல் நடந்து கொண்டார். ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்து கணவரை எங்கே கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார் எனச் சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் தனக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக் கூறிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

சபியால் ரஹ்மான் சோதரர், தனது அண்ணனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்து தொடங்கிய நிலையில், காவல் நிலையத்தில் ரஹிமா சரணடைந்து, கணவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News