இந்தியா
குஜராத்தில் 4.3 என்ற ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்
- ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
- லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் இன்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.